தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.தமிழகத்தின் 14வது ஆளுநராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017 அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அவர், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. […]
