தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ” தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 42 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும். எனவே, அடுத்துவரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 […]
