தேர்தலில் பொய்யான தகவல்களை கூறி வெற்றி பெற்ற ஊராட்சிமன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சடயனேந்தல் ஊராட்சி மன்ற தலைவராக மல்லிகா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார் இவரது மகள் கயல்விழி சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார். […]
