உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 145 வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கின்றது. இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர். […]
