அமெரிக்காவில் குடியிருப்பிலிருந்து வெளியே வந்த பெண் முன்பு ஒரு பெரிய பாம்பு படமெடுத்து நின்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் சவுன்வா லிகாம்பெக்ட் என்ற பெண் அவரின் குடியிருப்பிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் சுவரின் அருகில் வந்த சமயத்தில் புதருக்குள் மறைந்திருந்த பெரிய பாம்பு திடீரென்று அவர் முன் வந்து படமெடுத்து நின்றுள்ளது. அதனை பார்த்தவுடன் அவர் அதிர்ந்துபோய் அங்கேயே நின்றுவிட்டார். அதன்பின்பு, பதறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடியுள்ளார். இந்த காட்சியானது, […]
