ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யாபார்மசி, மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததன் படி உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. இந்த 5 பொருட்களை ஆய்வு செய்ததில், ரத்த அழுத்த, சக்கரை நோய், அதிக […]
