மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையின் முன்பு போலி அடையாள அட்டை மற்றும் முத்திரையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இது குறித்து தொழிற்சாலை அதிகாரி பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தில் அவர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் […]
