கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி புதூர் பகுதியில் விக்ரம் சுதாகர் என்பவர் நண்டுவிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாப்பில் இருக்கிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர், பங்கஜ் மித்தல் ஆகிய இருவரும் இயற்கை உரத்தை வாங்கி பஞ்சாபில் விற்பனை செய்து தருவதாக திருநாவுக்கரசிடம் தெரிவித்தனர். இதனை நம்பி திருநாவுக்கரசு அவர்களை விக்ரம் சுதாகருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]
