கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் நெல்லியார் கோணம் குழிவிளை பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சஞ்சய் என்பவர் அறிமுகமானார். நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணியை அவரது நிறுவனம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கட்டிட வேலையை முடிக்க வேலையாட்கள் காண்டிராக்டை எனக்கு தருவதாகவும், அந்த […]
