2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காநல்லூரில் வசிக்கும் பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் செல்வராஜ் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கார் ஓட்ட அனுமதி அளிக்குமாறு கதிரவன் கேட்டதற்கு 2 1/3 […]
