இராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் உணவு மற்றும் எரிபொருள்களுக்கான விலைவாசி பெருமளவில் உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ஆட்சியை கலைத்து இராணுவத்தினர் அதிகாரத்தை கைப்பற்றினர். இதனையடுத்து இராணுவத்தினர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி மற்றும் அதிபர் என் மைன்ட் உட்பட பல அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் அடைத்தனர். இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பொதுமக்களும் கிளர்ச்சியாளர்களும் சூகிக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்துகின்றனர். இதில் […]
