நீலகிரி அருகே பணப்பையை தவற விட்ட முதியவரிடம் காவல்துறையினர் ஓப்படைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை கிடந்ததுள்ளது. அந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரி என்ற பெண் காவலர் கண்டெடுத்துள்ளார். பின்னர் அதற்குள் பார்த்தபொழுது 2,27,000 ரூபாய் இருந்ததுள்ளது. ஆனால் அதை தவற விட்டு சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ஊட்டி நகர மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]
