பார்வதி தேவி வரைந்த அழகான குழந்தையின் படத்திற்கு தனது மூச்சுக் காற்றினால் உயிர் கொடுத்தார் சிவபெருமான். அவ்வாறு பிறந்தவர் தான் சித்திரகுப்தன். அவர் பிறந்த ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்றுதான் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகின்றது. எமதர்மர் சித்திரகுப்தனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் கணக்குப் பிள்ளையாக எமலோகத்தில் பதவியேற்றார். அவர் எழுதும் கணக்கின் அடிப்படையிலேயே நமது வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அமைகின்றன. இந்திரன் தன் பாவங்கள் நீங்கப் […]
