விழா காலங்கள் நெருங்குவதால் பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பரவியதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவைகள் முடங்கியது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து அதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விழாக் காலங்கள் நெருங்குவதால், பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக சர்வே முடிவுகள் கூறுகிறது. இதனையடுத்து தற்போது விழாக்காலங்களை முன்னிட்டு பொதுமக்கள் […]
