தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் தலைமை அலுவலகத்தில் வைத்து புதுவிதமான இனிப்புகளை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களிடையே ஆவின் இனிப்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து சுமார் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன், 225 வகையான இனிப்பு பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் […]
