பணியில் இருந்தபோது மது அருந்திய ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக மதுரை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சரவணன் லட்சுமிபுரத்தில் உள்ள நீதிபதியின் குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நீதிபதி குடியிருப்புக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லும்போது சரவணன் மது அருந்திவிட்டு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து பணியில் இருக்கும்போது மதுபோதையில் நிற்கக்கூட […]
