பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்துராஜபுரம் பகுதியில் மாரியப்பன் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் செங்கமலபட்டி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரஞ்சித்குமார், குருசாமி ஆகியோர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 290 ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மணிகண்டன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். […]
