பேருந்தில் பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவக்கொல்லைப்பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி கார்த்திகா என்பவரும் பட்டுக்கோட்டையிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லட்சத்தோப்பு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக […]
