மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் கோபத்தில் தந்தையை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தவர் 45 வயதுடைய ராமு. இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு 20 வயதுடைய தினேஷ் என்ற மகனும், 15 வயதுடைய திவ்யா என்ற மகளும் உள்ளார்கள். ராமு ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். ரேணுகா சிப்காட்டில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். […]
