மது அருந்த பணம் தர மறுத்த மூதாட்டியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் பூசிமலைகுப்பம் என்ற கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாவாசை (எ) சிலம்பரசன் என்ற பேரன் இருந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் தன்னுடைய பாட்டி கோவிந்தம்மாளிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் இரும்பு கம்பியை வைத்து கோவிந்தம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார். […]
