சென்னை கொளத்தூர் அய்யப்பா நகரில் வசித்து வருபவர் நேரு (48). இவர் விவசாய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துவருகிறார். இவரை மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசி மிரட்டி வந்தார். அந்நபர் கூறியதாவது “தன்னை ஜி.எஸ்.டி. அதிகாரி என கூறிக்கொண்டார். மேலும் நேருவின் நிறுவனம் ரூபாய் 4 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டியதுதான். ஆகவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று […]
