ஆன்லைனில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி நுதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் லாரி டிரைவரான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போனில் போன்-பே செயலி மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொண்டு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரின் செல்போன் எண்ணிற்கு போன்-பே நிறுவனத்தின் பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் முத்துராமலிங்கத்திற்கு 1,957ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், அதனை […]
