திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது டி. டி. வி. தினகரன் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு யாருடனும் கூட்டணி இல்லை. பணத்துடன் மட்டுமே கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகத்திற்கு தக்க பதிலடி மக்கள் கொடுக்கவேண்டும். திமுகவை சேர்ந்தவர்கள் கைகொடுப்பதுபோல் கையில் இருக்கும் மோதிரத்தை திருடி விடுவார்கள். பஜ்ஜி கடையில் பாக்சிங் செய்தவர்கள். அவர்கள் ஆட்சிக்கு […]
