விக்ரம் நடிப்பில் இப்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி இருக்கிறது. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனையடுத்து பா.இரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து இருந்தது. சியான் 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இவற்றில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரம், ஜி.வி. பிரகாஷ், கலையரசன், […]
