மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைப்பதற்கு ரூ 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை மாவட்டம், பேரூரில் பட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்து விட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கோவிலுக்கு வரும் முதியோர் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரூ 5.25 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நன்கொடை வழங்கிய பேட்டரி கார் சேவையை ஆரம்பித்து வைத்தார். […]
