ராஜஸ்தான் மாநிலம் திக்கா பகுதியை சேர்ந்த சதுரராம் மேக்வால் என்பவர் தனது பண்ணையில் இருந்து தனது மனைவியுடன் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அவர் குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் அவரை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடித்ததால் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதுரராம் மேக்வாலுக்கு தலை, முதுகு மற்றும் விலா […]
