பட்டாசு வெடித்த போது தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பரவை முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மருது. இவருக்கு 8 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார். நவீனா கடந்த மாதம் 15ஆம் தேதி வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் . அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து வந்த தீப்பொறி சிறுமியின் ஆடையில் விழுந்ததால் ஆடை முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அலறியபடி சிறுமி அங்கும் இங்கும் ஓடியுள்ளார். […]
