இளைஞர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் இருக்கும் அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரம் Stras bourg. புகழ்பெற்ற இந்நகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள சிறிய கிராமம் Boof zeim. இக்கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அப்போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் மோட்டார் பட்டாசு என்று ஒரு பட்டாசை வெடித்துள்ளார். அப்போது, அப்பட்டாசு அந்த இளைஞரின் அருகிலேயே அதிரும் வகையில் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. […]
