திடீரென பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமிபுரம் பகுதியில் சொந்தமான பட்டாசு கடையுள்ளது. இந்த கடையை முத்துக்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து கடையின் அருகே கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை […]
