தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடைவிதித்துள்ளது. மாசுபாட்டைத் தவிர்க்கும் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஹரியாணா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, குளிர்காலத்தை முன்னிட்டு ஏராளமான பண்டிகைகள் வருகிறது. இதற்கிடையில் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதில் […]
