சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு நாளான நேற்று அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பகுதியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு கண்குளிர காட்சி கொடுத்தார். இந்த […]
