பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் குளப்புரம் வன்னியக்கோடு பகுதியில் பிரமிக் டேனியல் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாய்-தந்தை இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று பிரமிக் டேனியலின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரமிக் டேனியல் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]
