நடைபெற இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் நிதிநிலை அதாவது பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அரசுக்கு ஏற்படும் எதிர்பாரத செலவுகள் மற்றும் அவசர செலவுகளை […]
