ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மக்டலெனா ஆண்டர்சன், கடந்த புதன்கிழமை அன்று பட்ஜெட் தோல்வி ஏற்பட்டதால் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகினார். சுவீடன், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை தழுவினார். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, நிதி அமைச்சரான மக்டலெனாவை கட்சி தலைவராக தேர்வு செய்தனர். அதன்பின்பு, அவரை பிரதமராக நியமிக்க நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் இருந்த 349 உறுப்பினர்களில், […]
