மார்ச் 3 வது வாரத்தில் தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி மாலை 5 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து இன்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கின்றனர். மேலும் நாளை மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான பதவிகளில் தி.மு.கவினரே அமர உள்ளனர். […]
