புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று 2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். […]
