Categories
உலக செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு… இரு நாட்டு வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

இந்தியா-பாகிஸ்தான் படை வீரர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைப் பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதி, பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை, ராஜஸ்தானில் உள்ள பர்மார் எல்லை பகுதிகளில் உள்ள இருநாட்டு வீரர்களும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். தற்போது இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யா அதிபரின் திடீர் முடிவு…! பின்வாங்கும் படைகள்… அமைதியாகும் எல்லைகள்….!!

ரஷ்யா உக்ரேனிய மற்றும் கிரிமிய எல்லையில் நிறுத்தியிருந்த ராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ரஷ்ய சார்புடைய உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கும், உக்ரேனியத்தின் ராணுவத்தினருக்குமிடையே கடந்த 2014 முதலில் இருந்தே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா சுமார் 1,00,000 திற்கும் மேலான ராணுவ வீரர்களை உக்ரேனியாவின் எல்லையில் குவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கணக்கீடு தெரிவிக்கிறது. மேலும் கிரிமியின் தீபகற்ப எல்லையிலும் ரஷ்யா 40 போர்க் கப்பல்களையும், சுமார் 10,000 வீரர்களையும் திட்டமிட்டபடி நிறுத்தியுள்ளதாக மாஸ்கோ […]

Categories

Tech |