சாகுபடி செய்த மக்காச்சோள பயிரை படைபுழு தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி, தலமலை, கேர்மாளம்,குளியாடா என 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது வழக்கமாக இருக்கிறது. அதன்படி சாரல் மழை காரணமாக இந்த வருடமும் விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச் சோளத்தை சாகுபடி செய்தனர். இதனையடுத்து 3 மாத கால பயிரான மக்காச்சோளம் தற்போது […]
