சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதாகவும், இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை […]
