ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான செந்தில்வேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா(27) என்ற மனைவியும் ராஜேந்திர பாலாஜி(7) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகே […]
