மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்பட்டி அமளி நகரில் கூலி தொழிலாளியான வர்கீஸ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயமேரி பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை பார்ப்பதற்காக வர்கீஸ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து […]
