படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகில் கன்னாபட்டியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி 47 வயதுடைய பசுபதி. இவர் தனது சொந்தக்காரர் ஒருவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வேலை பார்த்து விட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் போது படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
