சிறுமி ஒருவர் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு பாடம்கற்பிக்கும் கற்பிக்கும் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது எகிப்து தலைநகரை சேர்ந்தவர் ரீம் எல் கவ்லி(12). சிறுமியான இவர் தற்போது ஆசிரியராக மாறியுள்ளார். வீடு வீடாக சென்று 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். சிறுமியினுடைய இந்த முயற்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. […]
