ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரபல ஏரியில் காணாமல் போன நபரை சுவிட்சர்லாந்து உட்பட மூன்று நாடுகளை சேர்ந்த காவல்துறையினர் 23 படகுகளில் தேடி வருகிறார்கள். போலந்து நாட்டை சேர்ந்த 60 வயதுடைய நபர் தன் குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெர்மனிக்கு வந்துள்ளார். அப்போது அவர் மட்டும் Constance என்ற ஏரியில் படகு சவாரி செய்ய தனியாக சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் குடும்பத்தார் பார்வையிலிருந்து மாயமாகிவிட்டார். உடனடியாக, அந்த நபரின் மகன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
