கடலில் நீர்மட்டம் குறைந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். இவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். இங்கு பூம்புகார் […]
