கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில் லிங்காபுரம்-காந்தவயல் கிராமங்களுக்கு இடையே இருக்கும் 20 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் இணைப்பு சாலையும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டு தண்ணீரில் வாகனத்தை இயக்கி செல்வதால் பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது. […]
