கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த துறைமுகம் சரியான முறையில் கட்டப்படாததால் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி கடந்த 4 வருடங்களில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைமன் என்ற மீனவர் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் […]
