இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக அறிவித்திருப்பது இந்தியாவை அவமதிப்பது போன்று இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 விசைப்படகுகளை அவர்களிடம் ஒப்படைக்காமல், இலங்கை அரசு அதனை ஏலம் விடப்போவதாக அறிவித்திருக்கிறது. இச்செய்தி, இந்திய மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா தாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில், எப்படியும் நம் […]
