படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு குற்றாலத்திற்கு குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக செல்வார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக குண்டாறு அணையில் படகு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு […]
