கேரளாவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைக்கப்பட்டது அம்பலமானது. கேரளா மாவட்டம், வலியதுறையை சேர்ந்தவர் அல்பினா அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அல்பினாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து நீர் கசிய தொடங்கியுள்ளது. […]
